இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

0
208
No more lunch program for the students of this school!! Tamil Nadu Govt Released Strange Announcement!!
No more lunch program for the students of this school!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் முதல் பள்ளிகளுக்கு எடுத்து வரும் புத்தகப் பை சீருடை உள்ளிட்டவற்றை  வழங்கி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் ஆரம்ப கட்டத்திலிருந்தே அமலில் உள்ளது.

இருந்ததையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டு வந்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு கிச்சடி பால் உள்ளிட்டவை  வழங்கப்படுகிறது. அதேபோல மதிய உணவுத் திட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க முட்டை சிறுதானியம் போன்றவையும் வழங்குகின்றனர். இதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பயன்பெறுகின்றனர். நமது தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் கிட்டத்தட்ட 175 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றும் வருகின்றனர்.

இனிவரும் நாட்களில் அதாவது ஜூன் மாதம் முதல் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பள்ளி சத்துணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்குவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றறிக்கையையும் தற்பொழுது வெளியிட்டுள்ளது. மேற்கொண்டு மாணவர்களுக்கு உரித்த நேரத்தில் தரமான உணவு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க புதிய ஊழியரை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இனி தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும்.