அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை!
இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில். இந்த ஆண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் அவ்வகையில் பள்ளிகளும் திறக்கப்பட்டு தேர்வு நடத்தி கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய அரசு பல்வேறு புதிய திட்டங்களை அந்த வகையில் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை சரி செய்ய என்னும் எழுதும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2025 ஆம் ஆண்டு 8 வயது குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் மற்றும் அடிப்படை கணித திறன்களை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிவிப்பில் பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. மேலும் அதனைத் தொடர்ந்து புதுவையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டடுள்ளது.
மேலும் நாட்டின் 75வது சுதந்திர தினவிழா முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள 75 பள்ளிகளுக்கு சென்று பள்ளிகளின் தரம், மாணவர்களின் வளர்ச்சி மற்றும் பள்ளி நிர்வாகம் போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் நேற்று காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த கவர்னர் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பள்ளி மாணவர்களிடம் உரையாடினர். மேலும் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அப்ப பள்ளி மாணவர்களிடம் பேசினார். மேலும் செய்தியாளரிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் அன்னை தெரசா பள்ளியில் மாணவிகளின் வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.