நீங்க எஸ்பிஐ வாடிக்கையாளரா? அப்படின்னா இத நீங்க நிச்சயம் தெரிஞ்சுக்கணும்!

0
91

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் கிளைகளில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கும் இணையதள பேங்கிங் மற்றும் பல பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு சில கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.

சில வங்கிகள் மினிமம் அக்கவுண்ட் பேலன்ஸ் தொகையை பராமரிக்காமல் விட்டாலும் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் வேறுபட்டதாக காணப்படவில்லை என்றாலும் கூட நடந்த 2020 ஆம் வருடம் முதல் சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்காமல் இருப்பதற்கான அபராத தொகையை தள்ளுபடி செய்திருக்கிறது.

அதேபோல பல சேவைகளுக்கான எஸ்பிஐ பரிவர்த்தனை கட்டணங்கள் கிளையின் இருப்பிடம் அல்லது தங்களுடைய வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உள்ளிட்ட பல காரணங்களை பொறுத்தது.

பல நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான எஸ்பிஐயின் சேவை வரி பிடித்தம் தொடர்பாக தற்போது பார்க்கலாம்.

ATM பரிவர்த்தனை கட்டணம்

சராசரியாக 1 லட்சம் ரூபாய் வரையில் மாதாந்திர இருப்புத் தொகையை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வங்கியின் ஏடிஎம்களில் மாதத்திற்கு முதல் 1 பரிவர்த்தனைகளுக்கு இலவச பரிவர்த்தனை வரம்பை பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.

மற்ற வங்கிகளின் ஏடிஎம்களுக்கு மும்பை டெல்லி சென்னை கல்கத்தா பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் இலவச பரிவர்த்தனை வரம்பு மூன்றாகவும் மற்ற இடங்களுக்கு ஐந்தாகவும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

சராசரியாக 1 லட்சத்திற்கும் மேல் மாதாந்திர இருப்புத் தொகையை பராமரித்து வரும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற இலவச பரிவர்த்தனை வழங்கப்படுகிறது.

நிர்ணயம் செய்யப்பட்ட வரம்புக்கு மேற்பட்டு செய்யும் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணமாக 5 மற்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் ரூபாய் 8 மற்றும் வரிகளை எஸ்பிஐ வங்கி வசூல் செய்து வருகிறது.

சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காமல் விடுவது மார்ச் மாதம் 2020 முதல் சேமிப்பு வங்கி கணக்கில் சராசரி மாதாந்திர இருப்பு தொகையை பராமரிக்காததற்கான அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த வங்கி தன்னுடைய இணையதளத்தின் மூலமாக தெரிவித்தி ருக்கிறது

இதற்கு முன்னதாக மெட்ரோ செமி அர்பன் அல்லது கிராமப்புற மண்டலமாக இருந்தாலும் கிளையின் இருப்பிடத்தை பொறுத்து 5 முதல் 15 ரூபாய் வரையில் இந்த வங்கி அபராதம் விதித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கியின் ஏடிஎம்மில் பணம் பெறுவதற்கான கட்டணங்கள் இலவச வரம்பை மீறி செய்யப்படும் ஒவ்வொரு பல பரிமாற்றத்திற்கும் ஒரு பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் வீதம் இந்த வங்கி வசூல் செய்கிறது.

மற்ற வங்கி ஏடிஎம்களில் செய்யப்படும் ஒவ்வொரு கூடுதல் பணப்பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடமும் 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

இதை தவிர போதுமான இருப்பு இல்லாமல் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 மற்றும் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து கட்டணமாக வசூல் செய்கிறது இந்த வங்கி.

இந்த வங்கியில் பணம் பெறுவதற்கான கட்டணம் வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்கள் என்று இரண்டிலுமே 4 இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் செல்லும்போது கட்டணங்களை வசூலிக்கிறது. பிரான்ச் சேனல் ஏடிஎம்மில் ஒரு ரொக்க பரிவர்த்தனைகளுக்கு 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியையும், சேர்த்து வசூல் செய்கிறது இந்த வங்கி.

அதேபோல காசோலை புத்தக சேவை வரி ஒரு நிதியாண்டில் முதல் 10 காசோலை சீட்டுகளை இலவசமாக வழங்குகிறது. இந்த வங்கி அதன் பிறகு 10 காசோலை சீட்டுகள் கொண்ட புத்தகத்திற்கு 40 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியையும், 20 காசோலை சீட்டுகளை கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியையும், கட்டணமாக வசூலிக்கிறது. எஸ்பிஐ வங்கி அவசர காசோலை புத்தகங்களுக்கு 10 காசோலை சீட்டுகளைக் கொண்ட புத்தகத்திற்கு 50 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கிறது.