குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! காலி பணியிடங்கள் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவு இருந்து வந்தது அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வு மற்றும் போட்டித் தேர்வு என அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதுபோலவே போட்டி தேர்வுகளும் நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்தது. தற்போது கடந்த 13 ஆம் தேதியிலிருந்து 12 ஆம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை. அதனை அடுத்து சமூக வலைதளங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் எனவும் மீம்ஸ் போட்டு வந்தனர். மேலும் இந்த மாதம் இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.
முன்னதாகவே தேர்வு குறிப்பு அறிவிப்பு வெளியான போது 7,3௦1 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த காலி பணியிடங்களை கூடுதலாக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் 2,816 இடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.