5 நாட்களில் உயர் ரத்த அழுத்தம் குறைய! இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்!

0
343
#image_title

5 நாட்களில் உயர் ரத்த அழுத்தம் குறைய! இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தமானது 140 க்கு 90 இருக்கும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வேலை பழு காரணமாகவும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் இந்த உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் காலை உணவு நன்றாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இந்த உயர் ரத்த அழுத்தமானது வரக்கூடும்.

ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றால் கோபம் ,இருதய சார்ந்த பிரச்சினைகள், தூக்கமின்மை, பக்கவாதம், போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். மேலும் இந்த உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் டீ, காபி, சிக்கன் ,ஹோட்டல் உணவுகள், மாவு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்தல் மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தை வெறும் இரண்டு பொருட்களை வைத்து எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.கடுக்காய் இந்த கடுக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது வாதம் ,பித்தம், கபம் இந்த மூன்றையும் சமமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் குடலையும், ரத்தத்தையும் சுத்தம் செய்ய இந்த கடுக்காயானது. பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் இந்த கடுக்காயானது கிடைக்கும். ஒரு வேலைக்கு ஒரு கடுக்காய் பயன்படுத்தினால் போதுமானது. முதலில் ஒரு உரலில் ஒரு கடுக்காயை போட்டு நன்றாக தட்டி மேல் உள்ள தோள்களை நீக்கிக் எடுத்து கொள்ள வேண்டும். அதில் உள்ள கொட்டையை பயன்படுத்தக் கூடாது. கடுக்காய் தோலை சிறு துண்டுகளாக பிச்சி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு 200மிலி தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்த பிறகு ஆற வைத்து வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு காலை, மாலை இரு வேலையும் சாப்பிடுவதற்கு முன்பு இதனை குடிக்க வேண்டும் .இவ்வாறு தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் உயர் ரத்த அழுத்தம் ஆனது கட்டுப்பாட்டிற்குள் வரும். மேலும் இதனை தொடர்ந்து 15 நாட்கள் கூட குடித்து வரலாம்.S

author avatar
Parthipan K