வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 3000 வரை குறையும் மாதத்தவனை!!

Photo of author

By Gayathri

சொந்த வீடு வாங்க நினைக்கும் அனைவரும் பெரும்பாலும் வங்கியின் மூலம் கடன் பெற்று அதனை நிறைவேற்றுகின்றனர். அப்படி வீட்டிற்காக வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கவிருக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2025-ஆம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 6 நிதி கொள்கை கூட்டங்களை நடத்த அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் எனில் மொத்தமாக 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ விகிதம் குறையும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுரா 2025-ஆம் ஆண்டில் ஆர்பிஐ 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணத்தை வழங்கும்.100 அடிப்படை புள்ளிகள் ரெப்போ ரேட் குறைந்தால் வீட்டு கடன் இஎம்ஐ வெகுவாக குறையும்.

உதாரணத்திற்கு, ஒரு வங்கியில் 9.25% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு ஒருவர் ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு மாதம் 45,793 ரூபாய் இஎம்ஐ செலுத்தி வருகிறார் என்றால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைந்தால் இஎம்ஐ தொகை ரூ.42,603 ஆகக் குறையும் என்றும் இதன்மூலம் மாதம் ரூ.3190 வரை சேமிக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.