இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் ” Uber ” சேவை!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் முதல்முறையாக நீர் வழிப்போக்குவரத்தில் உபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனமானது இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல நாடுகளில் தங்களுடைய சேவைகளை மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உபர் செயலி மூலம் நாம் அன்றாட வாழ்விற்கு பைக், ஆட்டோ அல்லது கார் போன்ற வாகனங்களை முன்பதிவு செய்து அவற்றில் பயணிப்பது என்பது வேலைக்கு செல்பவருக்கு அத்தியாவசிய ஒன்றாக அமைந்திருந்த நிலையில், தற்பொழுது இந்த சேவைகளை தொடர்ந்து நீர்வழிப் போக்குவரத்திலும் உபர் தன்னுடைய கால் தடத்தினை இந்தியாவில் பதித்துள்ளது.

 

ஸ்ரீநகரின் ‘தல்’ ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ‘உபர் ஷிகாரா’ என்ற பெயரில் படகு போக்குவரத்து சேவையை உபர் நிறுவனம் தொடங்கியிருக்கிறது.காஷ்மீரின் பாரம்பரியமிக்க இந்த ஷிகாரா படகு சவாரி செய்ய விரும்புவோர், உபர் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் :-

 

✓ உபர் ஷிகாரா படகு சவாரிக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

 

✓ அதிகபட்சமாக 15 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த படகு போக்குவரத்திற்கான கட்டணம் என்பது அரசு நிர்ணயித்தது தான் என்றும் இந்த போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் எந்தவிதமான பிடிப்பும் இல்லாமல் நேரடியாக படகு ஓட்டுபவர்களுக்கு அது சென்று சேரும் என்றும் உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

‘தல்’ ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக சுமார் 4,000 ஷிகாரா பட்குகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆசியாவிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.