லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! தமிழக அரசின் புதிய சேவை!!
தமிழகத்தில் பொதுவாக அரசு அலுவலகம் என்றால் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிகிழமை நிறைவு பெரும். இதனால் பல பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன் பின் பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் போக்குவரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் இனி ஓட்டுனர் உரிமம் பெற வருகின்ற பொதுமக்களுக்கு சனிக்கிழமையும் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை மூலம் அனைத்து ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகங்களும் இனி சனிக்கிழமைகளிலும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் ஓட்டுனர் உரிமம் பெறப்பட பொதுமக்கள் வர்வதால் இந்த திடீர் அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தவகையில் இனி சனிக்கிழமைகளிலும் இ சேவை மையங்கள் செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஓட்டுனர் உரிமம் பெற வருகின்ற பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அலுவலகங்களும் மற்றும் இ சேவை மையங்களும் தொடர்ந்து சனிக்கிழமைகளிலும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தாமதமின்றி விரைவில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பல்வேறு சேவைகளை இணைய வழியில் மேற்கொண்டு வருகின்றார்கள்.அந்த வகையில் மொத்தம் உள்ள 48 சேவைகள் செயல்பட்டு வருகின்றனர்.
அதில் 6 சேவைகளில் ஓட்டுனர் உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.இவை அனைத்தும் ஆன்லைன் முறையில் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் ஓட்டுனர் உரிமம் பெற பொதுமக்கள் அதிக அளவில் விண்ணப்பித்து உள்ளதால் மீதமுள்ள 42 சேவைகளிலும் ஆன்லைன் முறையில் செயல்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சேவைகளும் ஆன்லைன் முறையில் செயல்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அந்த வகையில் இந்த 42 சேவைகளை ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்பட அரசு திட்டமிட்டுள்ளது.அதில் முதற்கட்டமாக 25 சேவைகள் ஆன்லைன் முறையில் செயல்படுத்தபட உள்ளது.