இன்றைய காலத்தில் ஆண்கள் விந்தணு தரம் குறைவால் பல வகையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.குறைந்த விந்தணுக்கள் மற்றும் தரமற்ற விந்தணுக்களை கொண்டிருக்கும் ஆண்கள் மூலம் குழந்தை பெறுவது கடிமான விஷயமாக உள்ளது.
ஆண்களின் விந்தணு தரத்தை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை கணிக்க முடியும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.ஆண்களின் பழக்க வழக்கத்தை பொறுத்து அவர்களின் விந்தணு தரம் அதிகரிக்கிறது.
வயிற்று தொப்பை இருக்கும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.புகைப்படிப்பவர்களுக்கு விந்தணு தரம் குறைய அதிக வாய்ப்பிருக்கிறது.பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஜங்க் புட்ஸ் விந்தணு தரத்தை குறைத்துவிடும்.
ஆண்கள் செய்யும் சில தவறுகளால் தான் அவர்களின் விந்தணுக்கள் குறைகிறது.உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் விந்தணு எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது.
ஆயுளை அதிகரிக்கும் விந்தணுக்கள்:
சிறந்த விந்தணுக்களை பெற்றிருக்கும் ஆண்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்று டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.ஆரோக்கியமான சுறுசுறுப்பான விந்தணுக்களை கொண்ட ஆண்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.
விந்தணுக்களின் எண்ணிக்கை சிறப்பாக இருக்கும் ஆண்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள் அதிகரிக்கும் என்று ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கிறது.குறைந்த விந்தணு தரம் உள்ள ஆண்களைவிட சிறப்பான விந்து தரம் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
ஆண்களின் விந்தணு தரம்,நிறம் மற்றும் சுவையை கொண்டு அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம்.ஆண்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் அதிக கவனம் செலுத்தினாலே விந்தணு தரத்தை உயர்த்திவிடலாம்.இதனோடு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அவசியம் பின்பற்ற வேண்டும்.