Breaking News, News, State

சத்துணவு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.600 லிருந்து உயர்த்தப்பட்ட பொறுப்பு படி!!

Photo of author

By Gayathri

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரக்கூடிய சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பொறுப்பு படியானது 600 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியக்கூடிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு நாளொன்றுக்கு பொறுப்பு படியானது 20 ரூபாய் வீதம் மாதம் 600 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது அதனை நாள் ஒன்றுக்கு 33 ரூபாய் வீதம் மாதம் 1000 ரூபாயாக வழங்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது.

இதற்காக தமிழக அரசு ரூ.6.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அரசாணியில் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள சிறப்பு பொறுப்பு படியின் மூலம் சத்துணவு பணியாளர்கள் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு பணியாளர்களுக்கு தமிழக அரசின் மூலம் 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அவர்களின் தகுதிக்கேற்ப சம்பளமானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பளம் இல்லாத அவர்களுக்காக சிறப்பு பொறுப்புப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பொறுப்புப்படியின் மதிப்பு உயர்த்தி தரப்படுவது சத்துணவு பணியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்!!முதலமைச்சர் வழங்கிய அரசாணை!!

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்!!