பிள்ளைகளுக்கு சொத்துக்களை பெற்றோர் எழுதிக் கொடுத்த பின்பு அந்த பெற்றோரை பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்றால் சொத்துக்களை மீண்டும் பெற்றோர்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொத்துக்களை எழுதிக் கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்ய முடியும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுத்திறந்த நிலையில் மீண்டும் அதனை ஹை கோர்ட் உறுதி செய்து இருக்கிறது.
இது குறித்து ஹை கோர்ட்டில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கு விவரங்கள் :-
நாகலட்சுமி என்ற தாயார் தன்னுடைய மகன் கேசவன் மீது சொத்துக்கள் அனைத்தையும் தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்ததாகவும் கடைசி காலத்தில் கேசவன் மற்றும் தனது மருமகளான மாலா தங்களை கவனித்துக் கொள்வார் என நினைத்தபொழுது கேசவன் திடீரென இறந்து விட்டதாகவும் அதன் பின் மருமகள் மாலா தன்னை கவனித்துக் கொள்ளாததால் தன் ஊரில் உள்ள ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.
அதன் பேரில் இந்த மனுவானது சுப்ரீம் கோர்ட்கள் தீர்ப்ப வழங்கப்பட்ட பொழுதும் மருமகள் மாலா ஹை கோர்ட்டுக்கு அப்பில் செய்திருக்கிறார். அங்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் இதற்கான தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளனர்.
அதன்படி, முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007-ன் 23(1)வது பிரிவு வயதான பெற்றோர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகவும் அவர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகும் பட்சத்தில் அவர்கள் எழுதிக் கொடுத்த சொத்துக்கள் அனைத்தும் அவர்களுக்கே மீண்டும் சொந்தமாகிவிடும் என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.