பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மின் இணைப்பு குறித்து புதிய தகவல்!! மின்சார வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!
தமிழக மின்சார வாரியமானது நுகர்வோருக்கு பயன்படும் வகையில் மின் இணைப்பு வழங்குவது குறித்து புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய மின் இணைப்பு கொடுப்பது மட்டுமின்றி அதன் பொது தகவல்கள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இணையத்தின் வாயிலாக புது மின் இணைப்பு அல்லது கொடுத்த மின் இணைப்பை ரத்து செய்தல் தற்காலிக மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
அதுமட்டுமின்றி ரத்து செய்யப்பட்ட மின் இணைப்புக்கான பணத்தை பெறுவது என அனைத்தையும் இந்த இணையத்தின் மூலம் நுகர்வோர்கள் செய்து கொள்ளலாம். மக்களுக்கு எளிமையான முறையில் பயன்படுத்தும் வகையில் இதனை வடிவமைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக மின்சாரவரியமானது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக தலைமை பொறியாளர்களுக்கு அமல்படுத்தியது. அதில், இனி நுகர்வோர்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் அவர்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
https://x.com/TANGEDCO_Offcl/status/1792411609693905393
மேற்கொண்டு மின் இணைப்பு வழங்க தாமதித்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருந்தது. அதன் பேரில் மின் இணைப்பு வழங்க தாமதமானால் அதற்குரிய காரணத்தை நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டுமென்று கூறியுள்ளனர். . தற்பொழுது அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் மக்களுக்கு இந்த புதிய இணைய சேவையானது அமல்படுத்தப்பட்டுள்ளது.