ரேஷன் அட்டை தார்ரகளுக்கு குட் நியூஸ்!! இனி இதுவும் இலவசம்.. வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!!
தமிழக அரசானது பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. இதனை நம்பியும் பல குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்பொழுது வரை நியாய விலைக்கடைகளில் அரிசி கோதுமை சர்க்கரை போன்றவற்றை கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது சிறு தானியங்களையும் வழங்க முன்வந்துள்ளனர்.இதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டே உள்ளது.
அந்தவகையில் பல நாட்களாக மத்திய அரசிடம் தமிழக அரசு, வருடம் முழுவதும் விவசாயிகள் அறுவடை செய்யும் கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து கொள்ளுமாறு கேட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இந்திய உணவுத்துறையிடமும் இதுகுறித்து அனுமதி கேட்டிருந்தது. ஆனால் தற்பொழுது மத்திய அரசு தான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. தமிழகத்திலேயே சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் தான் அதிகளவு சிறு தானியங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது.
இந்த அனுமதிக்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் கேழ்வரகிற்கு, விவசாயிகளுக்கு 1 கிலோ குவிண்டாலுக்கு ரூ 3,846 என்று வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது வரை 1290 டன் கொள்முதல் செய்துள்ளனர். இதற்கு 4 கோடி மேல் மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு தமிழக அரசு கேட்ட அனுமதியும் கிடைத்துவிட்டதால் அதிகளவில் கேழ்வரகு கொள்முதல் செய்ய தீவீரம் காட்டி வருகின்றனர்.
கடந்த முறையே நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவசமாக கேழ்வரகு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வரத்து அதிகரிக்க தொடங்கி விட்டதால் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இலவசமாக சிறு தானியங்கள் கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுள்ளனர். இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் கேழ்வரகு கம்பு போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.