சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!
கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றதை அடுத்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்தது.
அந்த வகையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்தையும் பயன்படுத்துபவருக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் அவ்வாறு ஒரே பயணச்சீட்டு கொண்டு வந்தால் அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து முதல்வர் ஆலோசனை செய்து இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது செயல்பாட்டிற்கு வர உள்ளது.
அதாவது சென்னையில் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில், மின்சார ரயில் என அனைத்திற்கும் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டை உபயோகம் செய்து வருகின்றனர். அதனை தடுக்க மூன்று சேவைகளையும் சென்னை வாசிகள் எளிமையான முறையில் பயன்படுத்துமாறு அவர்களுக்கு டிஜிட்டல் பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த டிஜிட்டல் பாஸ் அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் எனவும் மெட்ரோ ரயில்,மின்சார ரயில் போன்றவற்றில் அதனை ஸ்கேன் செய்து கொள்ளும் படி கூறியுள்ளனர்.இதுவே பேருந்தில் நடத்துனர்களுக்கு ஸ்கேனிங் கருவி கொடுக்கப்பட்டு அதன் மூலம் ஸ்கேன் செய்யும் வசதி கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த முறையால் புறநகர் மற்றும் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் கவுண்டரில் நின்று பயணச்சீட்டு வாங்கும் சிரமம் முற்றிலும் குறையும். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.