மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடுபட்டது.ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
கோடை வெயிலின் தாக்கம்,பொதுத்தேர்தல் முடிவுகள் ஆகிய காரணங்களால் பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 06 என்று பள்ளிக்கல்வித்துறை துறை தெரிவித்துள்ளது.
கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுத்தேர்தல் முடிவு வெளியான பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பொதுத்தேர்தல் ஜூன் 04 அன்று வெளியாக உள்ள நிலையில் ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மேலும் ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.