மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!
இரண்டு வருட காலமாக பொது தேர்வுகள் நடைபெறாத நிலையில் நடப்ப ஆண்டு தான் பொது தேர்வு நடைபெற்றது. அதை அடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி க்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியது. அதற்கான கால அட்டவணையும் முதலில் வெளியிட்டது.அதற்கடுத்ததாக நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும்.
ஆனால் தேர்வுகளை 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இவ்வாறு இருக்கையில் காலாண்டு தேர்வு முடிவடைந்ததும் அதற்கான விடுமுறை தேதிக்கான வரையறை வெளியிடப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை விடுமுறை அளித்தனர்.ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்துவதாக கூறியிருந்தனர். இதனை தற்பொழுது மாற்றி அமைத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்துள்ளனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணம் எழுத்து பயிற்சி அக்டோபர் 10ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடக்க இருப்பதால் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடக்க கல்வித்துறை கூறியுள்ளது.