மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

0
251
Good news for students released by the government! Change in school opening hours!
Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது.

அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிப்படைந்துள்ளது.டெல்லி ஹிமாச்ல், உத்திர பிரதேசம்,பஞ்சாப்,ஹரியானா, சண்டீகர் ஆகிய ஆறு மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கின்றது.

மேலும் ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பஞ்சாபில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும்.ஆனால் பள்ளி முடியும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப்பில் பள்ளிகள் வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleரேசன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! அமைச்சசர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
Next articleதேர்தல் ஆணையத்தின் அதிரடி திருப்பம்! இபிஎஸ்- ற்கு சாதகமா!!