மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! 

Photo of author

By Rupa

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

வருடம் தோறும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மகாதீபம் கோலாகலமாக நடைபெறும் நிலையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலம் என்பதால் சரிவர மக்கள் சென்று வழிபட்டு கொண்டாட முடியவில்லை.

இதனை அடுத்து இந்த ஆண்டு மகா தீபம் ஆனது கொடியேற்றத்துடன் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆறு மணிக்கு மழை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிலையில் இதனை பல லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வந்து பார்த்து கண்டு களிப்பர்.

அதுமட்டுமின்றி தீப திருவிழாவை காண தமிழக அரசும் ஆயிரக்கணக்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இச்சமயத்தில் மாணவர்களுக்கு பள்ளிகள் வைத்த நடத்தப்பட்டால் மிகவும் சிரமமாக இருக்கும். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை ஈடு செய்யவும் இந்த மாணவர்களுக்கு சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.