மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் எடுத்து வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தின் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு எடுத்து நடத்துவது போல் அவரது மகன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையும் அரச விழாவாக கொண்டாட வேண்டும் என்று மக்கள் கடந்த வருடமே முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை அடுத்து மக்கள் சென்ற வருடமே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த வருடம் ஆடி மாதம் திருவாதிரை திருவிழாவானது கோலாகலமாக கொண்டாட உள்ளனர். அதனால் அரியலூர் மாவட்டத்தில் இந்த ஆடி மாத திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலில் நடைபெற உள்ளது. அதனால் ஜூலை 26 ஆம் தேதி அரியலூர் விடுமுறையாக அம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். உள்ளூர் விடுமுறை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.