இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படித்திருக்கக் கூடிய மாணவர்களில் விமானியாக நினைக்கும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும் என இருந்த விதிகள் தற்பொழுது கலை மற்றும் வணிகவியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விமானியாக பயிற்சி பெறலாம் என்பது குறித்த ஆலோசனை சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கான தகவல் கூடிய விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அறிவியல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே விமானியாக பயிற்சி பெற முடியும் என்றும் அதற்கு முன்பு விமானி பயிற்சி பெற்று உரிமம் பெற்றவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வி தகுதி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமீப காலமாக 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் முடித்திருக்கக்கூடிய அவர்களுக்கு மட்டுமே விமானி பயிற்சி மற்றும் விமானி ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலைகளால் பலரும் இந்த படிப்பினை படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது. உலகில் உள்ள மற்ற நாடுகளில் விமானி ஓட்டுனர் பயிற்சி மற்றும் அதற்கான உரிமம் பெறுவதற்கான கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு மட்டுமே. அதில் இருக்கக்கூடிய பாடப்பிரிவுகள் பற்றி எந்தவித ஐயமும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய இந்த ஐயப்பாடானது விரைவில் களையப்படும் என்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் விமானி ஓட்டுனர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறித்த விவாதங்கள் தற்பொழுது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.