தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்!! குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!
தமிழக அரசு காவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு விடுப்பு சலுகை, ஊதிய சலுகை போன்ற சலுகைகளை தமிழக அரசு வழங்கி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல விடுப்பு சலுகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கு காரணமாக அந்த சலுகை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தது. அதன் பின் அந்த சலுகை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இந்த சலுகை காவலர்களின் பணி சுமையை குறைக்க உதவியாக இருந்தது. அதனையடுத்து பல தரப்பில் இருந்து வந்த கோரிக்கை காரணமாக அந்த சலுகை மீண்டும் தொடங்கவதாக போலியான தகவலை சிலர் பரப்பி வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் மீண்டும் விடுப்பு சலுகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் போலீசார் விசுப்பு சலுகையை பெறுவதற்கு பணியாற்றும் உயர் அதிகாரிகளிடம் வின்னப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.
அதன் பின் பயணம் செய்து திரும்பிய பிறகு ஒரு மாதத்திற்குள் பயணம் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அதில் பயணப் பட்டியல் மற்றும் அசல் பயணச் சீட்டு இணைத்து சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்கள்.