பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார்.
இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பிறமொழிப் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இந்த கணக்கெடுப்புகள் முடிந்த பிறகு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், 3,192 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களான 3000 பேருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணையை வழங்குவார் என்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.