ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அதில் அவர் கூறியதாவது,தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வர தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் மழலையர்களுக்கு வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் இந்த ஆண்டு 9,494 பேர் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர் தேர்வாணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அதிக அளவில் ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றார்கள்.இதையெல்லாம் கணக்கில் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும். ரீடிங் மாரத்தான் மூலம் மாணவ, மாணவியர் பயன் பெற வேண்டும் என்பதால்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிக்கல்வித்திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது.மேலும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறினார்.