காவலர்களுக்கு குட் நியூஸ்! சீருடை பணியாளர் தேர்வில் புதிய மாற்றம்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்ட நிலை காவலர் ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்தது அனைவரும் அதில் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க விண்ணப்பம் படிவங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
இந்த விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். தேர்விற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனதகவல் வந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கு சந்தேகம் மற்றும் ஏதேனும் தகவல்கள் வேண்டுமானால்அதனை உடனடியாக பூர்த்தி செய்து கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்படி மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் எப்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பிபது என்ற தங்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக நேரடியாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். அதற்கான தொலைபேசி எண் 944597899 என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை கால 9 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீருடை பணியாளர் தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் ஆனது தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்கள் நடைபெறும் காவலர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், உடல் திறன் தேர்வுகளுக்கு 24 மதிப்பெண்களும் சிறப்பு மதிப்பெண்களாக ஆறு மதிப்பெண்களும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முன்பு நடைபெற்ற காவல் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண்களும் உடறல்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்களும் வழங்கப்பட்டது.
மேலும் தற்போது எழுத்து தேர்வில் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு உடன்திறன் தேர்வில் கூடுதலாக 9 மதிப்பெண்களளும் , சிறப்பு மதிப்பெண்களில் ஒன்றை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. உடல் திறன் தேர்விலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று உடல்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நடத்தப்படும் உடல் திறன் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு நடந்த உடல் திறன் தேர்வில் கயிறு ஏறுதல், அடுத்ததாக நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகியவை நடைபெறும். முன்பு இருந்த விதியின் படி கயிறு ஏறுதலில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுவார்கள் நீளம் உயரம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த மூன்று தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அதன்படி கயிறு ஏறுதலில் ஒருவர் தேர்ச்சி பெறாவிட்டாலும் நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகிய தேர்வுகளில் பங்கேற்கலாம் எனவும் காவலர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மூன்று தேர்வுகளில் அனைவரையும் பங்கேற்க செய்து உடல் திறன் தேர்வின் மொத்த மதிப்பெண்கள், எழுத்து தேர்வு மதிப்பெண்களோடு சேர்க்கப்பட்டு 1:2 என்ற வீதத்தில் உத்தேச தேர்வு பற்றிய வெளியிடப்படும்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும் தேர்வின் இறுதி முடிவு அளிக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. உடல்திறன் தேர்வில் முன்பு இருந்த விதிமுறையின் படி ஒரு நட்சத்திரத்திற்கு 2 மதிப்பெண்கள் இரண்டு நட்சத்திரங்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு மதிப்பெண்களும் 2 நட்சத்திரங்களுக்கு எட்டு மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கான அதிகார பூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி நடைபெற உள்ள காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் உடன் திறன் தேர்விலும் இந்த மாற்றம் செய்யப்படும்.ஆனால் தேர்வு மதிப்பெண்களில் பழைய முறையே பின்பற்றப்படும் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த 444 காலிப்பணி உதவி ஆய்வாளர் அவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது எனவும் இந்த தேர்வில் பழைய முறையே பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். புதிய மாற்றத்தின் மூலம் காவல்துறைக்கு மேலும் தகுதியான திறமையான இளைஞர்கள் அடையாளம் கண்டு தேர்வு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.