பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது!

Photo of author

By CineDesk

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது!

தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்தினர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது.

இன்று ரேஷன் கடை இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. பல இடங்களில் இணைய வசதிகள் சரியாக இல்லாத நிலையில்தான் ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. மேலும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பல நேரங்களில் வெயிலில் காத்து கிடக்க வேண்டியதாக  இருக்கிறது.

தற்போது பல மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இதனால் புதிய தோற்றத்துடன் தற்போதுள்ள ரேஷன் கடைகளில் நவீனப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்தத்த கடைகளில் இணையத்தள வசதியும் மேம்படுத்தப்படும். இந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வடிவில் புதுப்பொலிவுடன் அமைக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.