தமிழகத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வசிக்கக்கூடிய அவர்களுக்கு அந்த இடங்கள் அவர்களுக்கே சொந்தம் என பட்டா வழங்க இருப்பதாக தமிழக அரசு தலைப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது புறம்போக்கு நிலத்தில் வசிக்க கூடியவர்களை மகிழ்ச்சி படுத்திருக்கிறது.
சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகரில் நடத்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய் துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :-
புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் அதிலும் குறிப்பாக ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தில் 10 வருடங்களுக்கு மேலாக வாழ்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் ஆனது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கபட இருக்கக்கூடிய நிலையில் கடந்த 12ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெண் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடிய 86,000 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என தெரிவித்திருப்பது பட்ஜெட் ஆட்களுக்கு பிறகு புறம்போக்கு நிலத்தில் வசிக்க கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்குவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கக்கூடிய ஆளுங்கட்சியானது பட்ஜெட் தாக்கலில் மக்களுக்கு தேவையான பல நல்ல விஷயங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதோடு தற்பொழுது புறம்போக்கு நிலத்தில் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்புகளை உண்மையாகும் வண்ணமாக மாறி இருக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு தான் மக்களுடைய எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கின்றன என்பது தெரியவரும்.