ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் பண்டிகை தினத்தையொட்டி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இறுதி நேரத்தில் கூட்டம் அலைமோதுவதை தடுக்க அதற்கு உரிய வசதிகளை தற்போது தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பேருந்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய பூத் ஒன்று ஆங்காங்கே அமைத்து செயல்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக ரயிலில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை அமல்படுத்தினர். திடீரென்று அவசர வேலையாக ரயிலில் செல்லும் பயணிகளுக்கு அது சிரமத்தை தந்தது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பயணிகளின் சிரமத்தை குறைக்க நவம்பர் 1-ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும் இயங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.தெற்கு ரயில்வே, இருபத்தி மூன்று ரயில்கள் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்த இருபத்திமூன்று ரயில்களில் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதேபோல முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பழைய முறையை பின்பற்றி முன்பதிவு இன்றியே பயணிக்கள் பயணிக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் கோவை, நாகர்கோவில் ,திருச்சி ,திருவனந்தபுரம் இடையான ரயில்களிலும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.