விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! படக்குழு வெளியிட்ட அப்டேட்

Photo of author

By CineDesk

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! படக்குழு வெளியிட்ட அப்டேட்

CineDesk

Updated on:

varisu

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! படக்குழு வெளியிட்ட அப்டேட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நீண்ட காலமாக தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் விஜய். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி பல்வேறு மொழி படங்களிலும் பல புதுமுக இயக்குனர்களுடன் கைகோர்த்து பல வெற்றி படங்களை கொடுத்த வண்ணம் இருந்து தனக்கான மார்கெட்டையும் நிலைநிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளிவரும் என்று முன்னரே படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த முதல் பாடல் புரோமோ வெளியீடு இன்று மாலை வெளியாகும் என்ற அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மேலும் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளிவரும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றனர். மற்றும் பிரக்காஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு போன்ற பல திரை பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது.