தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Photo of author

By Gayathri

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Gayathri

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது.

தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் வழங்கி வருகின்றன. தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்திருப்பதாவது :-

ITI படித்த மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தேசிய தொழில் பழகுனர் முகாம் நடைபெற இருப்பதாகவும் இந்த முகாமினை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த தேசிய தொழில் பழகுனர் முகாமல் பல்வேறு பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி ஆனது வழங்கப்பட இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இந்த பயிற்சி முகாம் ஆனது வட சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி காலை 9 மணி அளவில் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்பழகுநர் முகாமல் கலந்து கொள்ள நினைப்பவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து தங்களுடைய சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ITI, 8TH ,10TH, 12TH தேர்ச்சி பெற்றவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.