இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தும் அனைவரிடமும் whatsapp கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Whatsapp நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்காக பலவிதமான அப்டேட்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது.
இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது “மெசேஜ் டிராஃப்ட்ஸ்” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பயனானது, நாம் ஒரு செய்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது, இடையில் வேறு சில வேலைகள் வந்து, அதன் மேல் நம் கவனம் திரும்பினால், செய்தி முழுமையடையாமலும், அனுப்பாமலும் அப்படியே இருக்கும் அல்லது அது காணாமல் போய்விடும். இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய செயலி.
இந்த அம்சம் மூலம் நீங்கள் ஒரு செய்தியை எழுத ஆரம்பித்து அதை நடுவில் விட்டுவிட்டால், அது வரைவில் சேமிக்கப்படும். அதன் பிறகு நீங்கள் அந்த முழுமையடையாத செய்தியை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த அம்சமானது முழுமையடையாத செய்திகளை மறந்துவிடாமல் காப்பாற்றும். மேலும் இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வேலை செய்கிறது.
மேலும், இந்த அப்டேட் மூலம், முடிக்கப்படாத செய்திகள் தானாகவே “டிராஃப்ட்” கிற லேபிளுடன், சாட்- டில் பட்டியலின் மேலே தோன்றும். இதன் மூலம் எந்த செய்திகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது, எனவே யூசர்கள் தாங்கள் முழுமையாக எழுதாத செய்திகளை விரைவாக முடிக்க முடியும். நம்முடைய செய்திகளை தேடி நேரத்தை வீணாக்கும் வேலையும் இந்த செயலியில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.