தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தனர்.அதேபோல கொரோனாவின் விஸ்வரூபம் ஆரம்பிக்கும் காலம் முன்பே அரசாங்கமும் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.மக்களும் கால வரையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்ததில் தொற்றின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது.
அப்போது மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல்பாஸ் செய்தனர்.தேர்வு எழுத நேர்ந்தால் அதிகப்படியாக கொரோனா தொற்று பரவும் அபாயம் நேரும் என்பதால் முதன்முதலாக தேர்வின்றி மாணவர்கள் அனைவருக்கும் ஆள் பாஸ் செய்தனர்.குறிப்பாக பொதுத்தேர்வான 10,11, ஆகிய வகுப்புகளுக்கு ஆள் பாஸ் செய்தனர்.அதனையடுத்து தொற்று குறைந்த காரணத்தினால் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அவ்வாறு அனுமதித்ததை அடுத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.அவ்வாறு திறந்த ஓரிரு வாரங்களிலேயே தஞ்சாவூரில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விறுவிறுவென தொற்று பரவியது.
அதனால் மேற்கொண்டு தொற்று பரவாமலிருக்க மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.அதனையடுத்து கொரோனாவின் 2 வது அலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கபடாமல்,மீண்டும் பொதுத்தேர்வின்றி ஆல்பாஸ் செய்தனர்.இந்நிலையில் மேற்கொண்டு உயர்கல்வியை எவ்வாறு சேர்ப்பது என்று பெரியே கேள்வி நிலவி வந்தது.அதற்காக பல ஆலோசனைக்கூட்டமும் நடந்து வந்தது.
அவ்வாறு நடந்ததில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பில் எழுதிய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிவிப்பை வெளியிட்டார்.அந்தவகையில் நாளை முதல் பாலிடெக்னிக் சேர்க்கை நாள் முதல் நடைபெறும்.அதனையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை ஆலோசனைக்கூட்டம் மூலம் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக கூறினார்.