முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்!

Photo of author

By Parthipan K

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்!

வருவாய்த்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டபேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முன்னதாகவே 1996ஆம் வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும் அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் முப்படைகள், துணை ராணுவப் படைகளில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவர்கள் அவர்களின் குடுபத்தினர் ,கொத்தடிமைத் தொழிலாளர்கள் ,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் நிலமற்ற ஏழைகள் ,மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற மற்றும் துணை ராணுவப் படைகளில் பணியாற்றியவர்கள் மேலும் இதர அடிப்படை தகுதிகளை பெற்ற பயனாளிகள் போன்றவர்களுக்கு பட்ட வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.