மகிழ்ச்சியான செய்தி!!பிரதமர் மோடி இன்று 71,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதங்களை வழங்க உள்ளார்!!

Photo of author

By Gayathri

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ( டிசம்பர் 23 ) இந்தியாவில் உள்ள 71,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமன அணைகளை வழங்க இருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

ரோஜ்கர் மேளாவின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை இன்று ( டிசம்பர் 23 ) ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக ரோஜ்கர் மேளா அமையும் என்றும் , தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சுய அதிகாரமளிப்பதற்கும் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், உள்துறை அமைச்சகம், தபால் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் மற்றும் துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.