மூட்டு வலிக்கு குட் பை!! களமறங்கியுள்ளது ரோபோட்டிக் டாக்டர்!!

0
8
Goodbye to joint pain!! Robotic doctor has launched!!
Goodbye to joint pain!! Robotic doctor has launched!!

இந்தியாவில் தரம் வாய்ந்த மருத்துவ கருவிகள் தயாரிக்கும் மெரில் நிறுவனம் தொடர்ந்து பலவிதமான முயற்சிகளை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சமீப காலங்களில் இந்தியா முழுக்க 30 வயது தாண்டிய பெண்கள் முதல் 40 வயது தாண்டிய ஆண்கள் வரை மூட்டு வலியினால் படும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக மக்கள் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சம் பேர் ஆண்டொன்றிற்கு இதனால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதற்கு சிகிச்சை எடுத்த பிறகும் இதன் வலியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.

மேலும் சிகிச்சைக்கு பிறகும் வலி இருப்பதனால் மக்கள் சிகிச்சை செல்வதையே விட்டுவிடுகிறார்கள். இதை கட்டுப்படுத்தும் வகையில் மெரில் நிறுவனம் புதிய தானியங்கி ரோபோடிக்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் இதயம், நோய் கண்டறிதல், எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பிரிவுகளில் தொழில்நுட்ப கருவிகளை துல்லியமாக தயாரித்து வருகிறது. மேலும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் இதய வால்வு செயல் இழப்பு போன்ற பாதிப்புகளை சரி செய்யும் நவீன ஆஞ்சியோபிளாஸ்டி உபகரணங்கள், டாவி உபகரணங்கள் மற்றும் பலூன் உபகரணங்களை அந்நிறுவனம் தொடர்ந்து வெற்றியான முறையில் தயாரித்து வருகின்றது.

இந்நிறுவனம் மத்திய அரசு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மெரிலின் ரோபோடிக்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம், வாபி நகரில் 2023 அக்டோபர் மாதம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது 1400 கோடி முதலீட்டில் 40,000 சதுர அடியில் இடம்பெற்றுள்ளது. அங்கு சமீபத்தில் இரண்டு கோடி மதிப்பீட்டில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கான மிஷோ எனப்படும் தானியங்கி ரோபோடிக்ஸ் இயந்திரங்களை வெற்றிகரமாக லாஞ்ச் செய்துள்ளது. இது காம்பெக்ட் வகை ரோபோக்களாகும். இந்த வகை ரோபோக்கள் தமிழகத்தில் மதுரை, நாமக்கல் உட்பட இந்தியா முழுவதும் ஐம்பது இடங்களில் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிறுவன தலைவர் சோஹில் சர்காசி இது குறித்து கூறும் போது, இந்தியாவில் மொத்தமாக 6 கோடிக்கும் மேல் மூட்டு அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ரோபோட்டிக் முறை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு வர வேண்டும். மேலும் எங்கள் நிறுவனம் மூலம் 800 நகரங்களில் ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த கட்டமாக புற்றுநோய், தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் நரம்பியலிலும் கவனம் செலுத்த உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகட்சியினுடைய அடிமட்ட தொண்டனையும் சிந்திக்கும் தலைவர்!! பனையூரில் நடந்தது இதுதான்!!
Next articleஎடப்பாடி மகனுடன் அண்ணாமலை ரகசிய சந்திப்பு!! உறுதியாகும் பழைய கூட்டணி.. அடித்துக் கூறும் அதிமுக நிர்வாகிகள்!!