Google Pay: 2 நிமிடத்தில் 15000 முதல் 25000 வரை கடன் பெறலாம்!! எப்படி தெரியுமா?

Photo of author

By Rupa

Google Pay: 2 நிமிடத்தில் 15000 முதல் 25000 வரை கடன் பெறலாம்!! எப்படி தெரியுமா?

மக்கள் தங்களின் தேவைகளுக்காகவே வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றனர். அவ்வாறு வங்கியிடமிருந்து கடன் பெறுபவர்கள் பெரும் தொகை மட்டுமே வாங்க இயலும். சிறுத்தொகை எதுவும் வாங்க இயலாது. இவ்வாறான காரணங்களால் தற்பொழுது பண பரிவர்த்தனை செய்யும் செயலிகள் கடன் வழங்க முன் வந்து விட்டது.

அந்த வகையில் பேடிஎம் போன்ற செயலி மூலம் சிறு தொகையை கடனாக பெற்று அதனை மாதந்தோறும் தவணை முறையில் செலுத்தும் வசதி உள்ளது. தற்பொழுது அந்த வரிசையில் ஜிபே-வும் (Google Pay) கடன் வழங்க முன்வந்துள்ளது. ஜிபே-வானது (Google Pay) இந்த கடன் தொகையை வழங்குவதற்காக டிஎம்ஐ என்ற பைனான்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

Axis வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இதன் மூலம் தனிநபர் கடனும், ஐசிஐசி வைத்திருப்பவர்கள் மூலம் யுபிஐ கடன் வசதியும் வழங்கவும் உள்ளது. இதில் குறைந்தபட்ச தொகையாக 15,000 முதல் 25000 வரை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெற்றுக் கொண்டு மாதந்தோறும் ரூபாய். 111 என்ற வட்டி விகிதத்தில் செலுத்தலாம்.

இந்த கடன் வசதியானது சிறு வணிகர்கள் மற்றும் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எப்படி ஜிபே (Google Pay) மூலம் கடன் பெறுவது:

ஜி பேக்குள் (Google Pay) சென்றதும் கீழே பிசினஸ் என்று இருக்கும்.

அதனை கிளிக் செய்து அந்தப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அந்தப் பக்கத்தில் எக்ஸ்ப்ளோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வாறு கிளிக் செய்ததும் அங்கு இன்ஸ்டார் மணி லோகோ காணப்படும்.

அந்த லோகோவை கிளிக் செய்தவுடன் எப்படி கடன் பெறுவது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

பின்பு கீழே சற்று ஸ்க்ரோல் செய்து பார்த்தால், வியூ மை லோன் என்று காண்பிக்கும்.

வியூ மை லோன் என்பதை கிளிக் செய்தவுடன் உங்கள் ஜி பே (Google Pay) குறித்த தரவுகளை அங்கு கொடுக்க வேண்டும்.

பின்பு உங்களுக்கு எவ்வளவு கடன் தேவை என்ற தகவல்களை கொடுத்தால் இறுதியில் KYC கேட்கும்.

அதனை சமர்ப்பித்துவிட்டு கிளிக் செய்தால் நீங்கள் கேட்கும் கடன் உங்களுக்கு வழங்கப்படும்.

பின்பு அங்கு கொடுத்துள்ள கெட் லோன் என்பதை கிளிக் செய்து உடன் உங்கள் பணம் உங்கள் அக்கவுண்டிற்கு வந்துவிடும்.