கூகுளின் புதிய அம்சம்!! இனி தேவையில்லாத ட்ராக்கர் கண்டறியப்படும்!!
இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு என்று அனை,த்திற்குமே ஸ்மார்ட் போன்களை பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த ஸ்மார்ட் போன்களில் தேவையில்லாத ட்ராக்கர் வருவதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் இதனை தவிர்பதற்காக ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு கூகுள் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தேவையில்லாத ட்ராக்கர்களை தவிர்க்க முடியும் என்பதே இவற்றின் சிறப்பு அம்சம்.இதில் ப்ளூடூத் அடிபடையில் எதாவது ஒரு ட்ராக் உங்களை கண்கானித்தால் அது உடனடியாக பயனாளர்களை எச்சரிக்கை செய்ய தொடங்கும்.
இந்த புதிய அம்சம்,சமிபத்தில் பதிவிறக்கம் செய்த நபர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.இதில் தேவையற்ற ட்ராக்கர் உங்களை ப்ளுடுத் அடிப்படையில் கண்கானித்தால் உங்களது ஸ்மார்ட் போனிற்கு தகவல் வரும். அதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் ட்ராக்கர் பயணித்த இடத்தின் வரைபடத்தையும் காண முடியும்.
இதனை தொடர்ந்து கண்டுபிடித்த ட்ராக்கரை வைத்து உங்களது சவூண்டு பிளே ஆப்சனை அடையாளம் கான முடியும்.மேலும் விருபதிற்கு தகுந்தது போல் தேர்ந்தெடுத்து கொள்ளவும் முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.