உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். இது தன்னுடைய பயனாளர்களுக்கு மிகச்சிறந்த வகையில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
இதன் மூலம் தற்போது உலகமே கைக்குள் அடங்கி இருப்பது உங்களால்தான். தற்போது இந்த கூகுள் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்காக “விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு” எனும் சிறப்பம்சத்தை பயனாளர் களுக்காக வழங்கியுள்ளது.
இது “பீப்பிள் கார்ட்ஸ்(People Cards)” எனும் சிறப்பம்சத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான வகையில் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டை உருவாக்கிக் கொள்ளலாம்.
இதனை உருவாக்க கூகுள் லாக் இன் செய்து, அல்லது ‘add me to search’ என சர்ச் பாக்ஸில் டைப் செய்ய வேண்டும்.
இது உங்களின் விவரங்களை கூகுளின் அக்கவுண்டில் இருந்து உங்களின் தகவல்களை உருவாக்கி, உங்கள் பணி மற்றும் வியாபாரம் சம்பந்தமான தகவல்கள், உங்களது மின்னஞ்சல், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணைப்புகளையும் இதில் பதிவேற்றி இணைத்துக்கொள்ளலாம்.
ஒரு அக்கவுண்டிற்கு ஒரு காடு மட்டுமே உருவாக்கி கொள்ள முடியும். தேவையில்லை எனில் அதனை அளித்துக் கொள்ளவும் வசதிகள் தரப்பட்டுள்ளன.