“நெல்லிக்காய் + சீரகம்”.. இப்படி பயன்படுத்தினால் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

Photo of author

By Divya

திருமணமான தம்பதியினர் பலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.தற்பொழுது நாட்டில் பிறப்பு விகிதம் சற்று சரிவை நோக்கி இருக்கிறது.இளைய தலைமுறையினர் இடையே குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஆர்வம் குறைந்து வருவது ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் ஆண்மை குறைபாடு,மலட்டுத்தன்மை,கருப்பை சார்ந்த பாதிப்பு,உடல் நலக் கோளாறு,பொருளாதார சூழல் போன்ற காரணங்களாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.சிலருக்கு உடல் நலக் கோளாறு காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.இவர்கள் கீழ்கண்ட மருத்துவத்தை பின்பற்றினால் கூடிய விரைவில் எதிர்பார்த்த பலனை காணமுடியும்.

குழந்தை பிறப்பை சாத்தியப்படுத்தும் நெல்லிக்காய் + சீரக பானம்:

நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்கள்:

*வைட்டமின் சி
*இரும்பு
*கால்சியம்
*பாஸ்பரஸ்

சீரகம் ஊட்டச்சத்துக்கள்:

*இரும்பு
*கால்சியம்
*பொட்டாசியம்
*மெக்னீசியம்
*வைட்டமின் ஏ,பி,சி
*தாதுக்கள்

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – நான்கு
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் நான்கு பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய் விதையை தூக்கி போட்டுவிடலாம்.

படி 02:

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.

படி 03:

பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

படி 04:

நெல்லிக்காய் மற்றும் சீரகம் தண்ணீரில் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த ரெடிமியை இரவு நேரத்தில் செய்ய வேண்டும்.இப்பொழுது நெல்லிகாய்,சீரகம் கொதிக்க வைத்த பாத்திரத்தை மூடிவிடுங்கள்.

படி 05:

மறுநாள் காலையில் நெல்லி,சீரகம் ஊறி இருக்கும் பானத்தை மீண்டும் சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் அளவு சுண்டி பாதியாக வரும் வரை காய்ச்சிய பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.

படி 06:

பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தம்பதியர் பருக வேண்டும்.இந்த நெல்லிக்காய் மற்றும் சீரக பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அதேபோல் நெல்லிக்காய் மற்றும் சீரகத்தை ஒன்றாக சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.