சளி இருமலை ஒரே நாளில் குணமாக்கும் நெல்லிக்காய்!! இதில் சூப் எப்படி செய்வது?

Photo of author

By Gayathri

பருவ காலத்தில் சளி,இருமல் போன்ற நோய் தொற்று பாதிப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள நெல்லிக்காயில் சூப் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)கரு மிளகு – ஒரு தேக்கரண்டி
3)பூண்டு பல் – நான்கு
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு
7)வர மிளகாய் – இரண்டு
8)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
9)பாசிப்பருப்பு – 1/4 கப்
10)கொத்தமல்லி தழை – சிறிதளவு

நெல்லிக்காய் சூப் செய்முறை:

அடுப்பில் குக்கர் வைத்து 1/4 கப் அளவிற்கு பாசி பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் நான்கு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்சர் ஜாரில் பூண்டு பல்,ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

அதற்கு அடுத்து இரண்டு பெரிய நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை ஜாரில் சேர்க்க வேண்டும்.அதற்கு அடுத்து இரண்டு வர மிளகாயை அதில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பெரிய நெல்லிக்காய் விழுதை அதில் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள பாசி பருப்பை அதில் சேர்த்து கிளற வேண்டும்.அடுத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.சூப் நன்கு கொதித்து வந்ததும் சிறிதளவு மல்லி தழை தூவி இறக்கவும்.

சளி,இருமல் இருப்பவர்கள் இந்த நெல்லிக்காய் சூப் செய்து குடித்தால் ஒரே நாளில் பலன் பெறலாம்.