சிறுநீரகத்தில் படியும் கற்காளால் அதன் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.சிறுநீரகத்தில் கற்கள் படியாமல் இருக்க நெல்லிக்காய் சாறு,சீரக பானம்,பீன்ஸ் பானம் செய்து குடிங்க.
தேவையான பொருட்கள்:-
1)மலை நெல்லிக்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த நெல்லிக்காய் ஜூஸை வடிகட்டி பருகினால் சிறுநீரக கற்கள் கரைந்தவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த சீரக பானத்தை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.வாழைத்தண்டு ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சிறுநீரக கல் கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பீன்ஸ் – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
பாத்திரத்தில் ஐந்து பீன்ஸை நறுக்கி போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும்.