இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் “நெல்லிக்காய் + இஞ்சி”!! இப்படி பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!!
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டியது முக்கியம்.மழை,குளிர் போன்ற காலநிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருந்தால் தான் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.
அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை கொண்டு முரப்பான் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நெல்லிக்காயில் கால்சியம்,புரதம்,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.அதேபோல் இஞ்சி செரிமானப் பிரச்சனை,வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை குணமாக்குகிறது.
தேவையான பொருட்கள்:-
1)மலை நெல்லிக்காய் – 10
2)இஞ்சி துண்டு – ஒன்று
3)வெல்லம் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் பெரிய நெல்லிக்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காய் விதைகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.
அதேபோல் ஒரு விரல் சைஸ் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவிக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு தண்ணீர் சுண்டும் வரை வதக்க வேண்டும்.
நெல்லிக்காய் கலவை நன்கு சுண்டி கெட்டியாக வந்ததும் தேவையான அளவு வெல்லத்தை இடித்து அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த கலவையை நன்றாக வதக்கி எடுத்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு ஒரு தட்டில் நெய் அப்ளை செய்து தயாரித்து வைத்துள்ள நெல்லிக்காய் இஞ்சி முரப்பானை அதில் கொட்டி பரப்பிவிட வேண்டும்.
பிறகு இதை ஆறவிட்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்து ஒரு டப்பாவில் போட்டு சேகரித்துக் கொள்ள வேண்டும்.இந்த முரப்பானை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.