நெஞ்சில் சளி கட்டியுள்ளதா? இதை ஜஸ்ட் 2 நிமிடத்தில் கரைக்கும் மூலிகை சூப் இதோ!!

0
291

பனி காலத்தில் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் தீராத தொல்லையாக மாறி வருகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் எளிதில் சளி,இருமல் பாதிப்பு உண்டாகிறது.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூதுவளை,வெள்ளைப்பூண்டு,வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சூப் செய்து பருகுங்கள்.

தூதுவளையில் அமினோ அமிலங்கள்,பினோலிக் ஸ்டீராய்டுகள்,சப்போனின்கள் உள்ளிட்ட உட்பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.சளி,இருமல் பாதிப்பை போக்கும் மிகச் சிறந்த மருந்தாக தூதுவளை திகழ்கிறது.தூதுவளை ரசம்,தூதுவளை டீ செய்து பருகி வந்தாலும் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தூதுவளை
2)சுக்கு
3)சின்ன வெங்காயம்
4)மஞ்சள் தூள்
5)தக்காளி பழம்
6)வெள்ளைப்பூண்டு
7)திப்பிலி
8)வெற்றிலை
9)உப்பு
10)மிளகு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி தூதுவளை மற்றும் ஒரு வெற்றிலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு 10 சின்ன வெங்காயம்,5 வெள்ளைப் பூண்டு,ஒரு தக்காளி,ஒரு துண்டு சுக்கு,பத்து மிளகை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள தூதுவளை,வெற்றிலை பேஸ்ட் மற்றும் சின்ன வெங்காய கலவையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கைகளால் கரைக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.கலவை கொதிக்கும் தருணத்தில் ஒரு தேக்கரண்டி சோளமாவை கரைத்து அதில் ஊற்றி சூப் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த சூப்பை தினம் இருமுறை செய்து குடித்தால் ஒருசில தினங்களில் சளி,இருமல் பாதிப்பு குணமாகிவிடும்.

தூதுவளை இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் நெஞ்சில் கட்டியுள்ள சளி கரைந்துவிடும்.தூதுவளை இலையுடன் வெற்றிலை,துளசியை அரைத்து சாறு எடுத்து ஒரு கிளாஸ் வெந்நீரில் கலந்து பருகி வந்தால் நெஞ்சு சளி பாதிப்பு குணமாகும்.

Previous articleபனியால் வறண்ட உதடுகள் ரோஜா இதழ் போன்று மிருதுவாக.. இந்த ஒரு பொருள் யூஸ் பண்ணுங்க!!
Next articleவண்டு கடியை குணமாக்கும் எண்ணெய்!! ஜஸ்ட் ஒரு ஸ்பூன் போதும்.. இப்போவே ட்ரை பண்ணுங்க!!