அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த வகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி வீட்டு வாடகை படி உயர்வு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அகவிலைப்படி 25 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டு வாடகைப்படி 27 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசு வெளியிட்ட உத்தரவின்படி, அகவிலைப்படியை 25 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்தப்பட்டு விட்டால் வீட்டு வாடகைப் படியையும், அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
எனவே தற்போது அகவிலைப்படி உயர்வு காரணமாக வீட்டு வாடகைப்படி உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப வீட்டு வாடகை படி அது மாறும் என்று குறிப்பிட்டு இருக்கின்றது.
இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 25 விழுக்காடாக அகவிலைப்படி உயர்ந்தாலும், வீட்டு வாடகை படி 27 சதவீதம் அகவிலைப்படி உயரும் என்று குறிப்பிட்டு இருக்கின்றது.