பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி!

0
158

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் குரும்பூர் பள்ளம் , சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் வருகின்றது.அதனால் சாலைகள் அனைத்தும் சேறும் ,சகதியுமாக மாறியுள்ளது. மலைகிராம மக்கள் தொடர் சிரமத்தில் உள்ளனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைகிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த வழக்கம் போலி அந்த பேருந்து நேற்று காலை பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்தானது சர்க்கரைபள்ளத்தில் சென்ற பொது சேறும் ,கற்களுக்கிடையே சிக்கி கொண்டது. அந்த பேருந்தை மேற்கொண்டு டிரைவர் இயக்க முடியவில்லை.அதனால் பயணிகள் பேருந்திற்குள் மாட்டி கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்தனர்.அதன் பிறகு பொக்லைன் எந்திரம் சுமார் இரண்டு மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு பேருந்து அங்கிருந்து மீட்கப்பட்டது.

Previous articleகேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்
Next articleவசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!