அரசு ஊழியர் கழுத்து அறுத்து கொலை! கரும்புத் தோட்டத்தில் சடலம் மீட்பு!
தினந்தோறும் ஆங்காங்கே கொலை ,கொள்ளை சம்பவம் நடைபெறுவது வழக்கமாகவே ஆகிவிட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்து மாளிகை மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் திலீப் குமார். இவர் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு அன்றாடம் சோளக்காடு வழியாக செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி அவர் சில நேரங்களில் அவர் வீட்டிற்கு அருகில் உள்ள தோப்பிற்கும் செல்வார். அவ்வாறு வீட்டிலிருந்து தோப்பிற்கு செல்லவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
வெகு நேரம் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசாரிடம் அவர் குடும்பத்தினர் காணவில்லை என்ற புகார் அளித்தனர். புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவரைத் தேடி உள்ளனர்.அப்பொழுது அவர் வீட்டின் அருகில் இருக்கும் கரும்பு தோப்பில் கழுத்து அறுத்த நிலையில் சடலமாக கிடந்தார்.
போலீசார் அவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலி மற்றும் ஸ்மார்ட் போன் காணாவில்லை. யாரேனும் மர்ம நபர்கள் இவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் ஸ்மார்ட் போனை பிடுங்கிவிட்டு இவரை கொலை செய்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைகின்றனர்.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தும் வருகின்றனர்.