தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு குறிப்பாக மாநிலத்தில் இருக்கக்கூடிய மின்சார சர்வேயர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தமிழக அரசு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது :-
பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய மின்சார சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர்கள் சர்வே பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சர்வே பணியில் பயன்படுத்தக்கூடிய ஊழியர்களுக்கு நகர்ப்புற மீட்டர் ரீடிங் ஒன்றுக்கு ரூ.4 ஆகவும் கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் ஒரு ரீடிங்க்கு ரூ.6 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என சர்வே பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதனை தற்பொழுது தமிழக அரசு ஏற்று சம்பள உயர்வு வழங்கியுள்ளது.
அதன்படி, நகர்ப்புறங்களில் எடுக்கப்படக்கூடிய ரீடிங் ஒன்றுக்கு ரூ.5 ஆகவும் கிராமம் மற்றும் மலை கிராமங்களில் எடுக்கப்படக்கூடிய ரீடிங் ஒன்றுக்கு ரூ.7 ஆகவும் தமிழக உயர்த்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இத தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கக்கூடிய சர்வேயர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.