வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

0
221

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வந்தனர்.மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் பொழுது அதிபர் மாளிகை அரசு கட்டிடங்கள் ஆகியவையை போராட்டகாரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த போராட்டம் காரணமாக அதிபர்கள் அவரவர்களின் உயர் பதவியை ராஜனாமா செய்தனர்.

அதன் பிறகு இலங்கையில் போராட்டங்கள் குறைந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது  வரை உணவு பற்றாக்குறை இருந்து வருகின்றது.இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் ,குழந்தைகள் என அனைவரும் மயக்கம் அடைந்து வருவதாக மாகாணா சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அவரவர்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதனால் அரசு ஊழியர்கள் இனி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவு தொடர்பாக இலங்கை அரசு உயர் அதிகாரிகள் சமூக ஊடங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவதை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என கூறப்பட்டுள்ளது.

Previous articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!
Next articleமீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த சூர்யகுமார் யாதவ்!