அரசு ஊழியர்கள் கேட்கும் சலுகைகள்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Photo of author

By Parthipan K

அரசு ஊழியர்கள் கேட்கும் சலுகைகள்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

முதல்வர் ரேஷன் அட்டைகளை கணக்கெடுத்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் தமிழகத்தில் மொத்தம் 227 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளது. அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

ஆய்வின்போது ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைகளை நீக்குவதற்கு நடவடிக்கை  எடுத்து வருகிறது எனவும் கூறினார்கள்.மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வழங்கும் போது அட்டைதாரர்கள் பதிவு செய்ய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசு  ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தக் கோரிக்கை விடுத்தனர். இந்த அகவலைப்படி உயர்த்தும் திட்டமானது ரேஷன் கடை ஊழியர்களுக்கு இல்லை எனவும் தெரிவித்தனர். அதனை மறுத்து ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த ஏழாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.

அதன்படி தற்போது தமிழக அரசு ஆலோசனை நடத்தி ரேஷன் கடை ஊழியர்கள்  ஆகவலை படி 14 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனையடுத்து கூட்டுறவு சங்க ஊழியர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் இணைந்து பல  சலுகையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து அரசு விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.