அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!!

Photo of author

By Parthipan K

அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!!

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக அந்த ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதமாதம் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக அளித்த தனது தேர்தல் அறிக்கையின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள். அதன்படி வருகிற மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்படமாட்டாது. எனவே அன்றைய நாளில் விடுப்பு எடுத்தால் அன்றைய தினம் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.