அரசு ஊழியர்கள் கட்டாயமாக இதை பின்பற்ற வேண்டும்!! மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் தமிழக அரசு!!

Photo of author

By Gayathri

அரசு ஊழியர்கள் கட்டாயமாக இதை பின்பற்ற வேண்டும்!! மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் தமிழக அரசு!!

Gayathri

Government employees must follow this!! Action will be taken if they violate it.. Tamil Nadu government warns!!

தமிழகத்தில் பணியாற்றி வரக்கூடிய அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக தங்களுடைய பணி நேரத்தின்பொழுது ஐடி கார்டு அடைந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகை பதிவிற்கு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் ஐடி கார்டு அணிவதும் தற்பொழுது கட்டாயமாகப்பட்டிருக்கிறது.

பொதுவாக அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது மட்டுமே தங்களுடைய ஐடி கார்டுகளை பயன்படுத்துவதாகவும் வேலை நேரங்களில் ஐடி கார்டு போடாமல் இருப்பது குறித்து பல்வேறு முறை எச்சரிக்கப்பட்ட பொழுதும் வேலை நேரத்தில் ஐடி கார்டு அணிவதில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வர நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிக்கை இது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

தமிழக அரசு அறிவிப்பில் வெளியிட்டிருப்பதாவது :-

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயமாக தங்களுடைய மணி நேரத்தின் பொழுது ஐடி கார்டு அணிந்திருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு முறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அரசினுடைய சில துறைகளில் மேற்கண்ட வழிமுறைகளை கவனமாக பின்பற்றவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஜூலை 7ஆம் தேதி அன்று அழைக்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி கட்டாயமாக அதிகாரிகள் ஐடி கார்டு அடைந்திருக்க வேண்டும் என்றும் நீரினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருப்பது அரசு ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.